இறைவனில் உண்மையான வாழ்வு · இறைவனில் உண்மையான வாழ்வு
அத்தியாயம் 107: என்னை புறக்கணிக்காதீர்கள், நானும் உங்களை புறக்கணிக்க மாட்டேன் இந்த அத்தியாயத்தில் இயேசு தம்மை முதலாவதாகக் கொண்டிருக்கவும், தம் பிரசன்னத்தை நினைவில் வைக்கவும், தம்மை அலட்சியம் செய்துவிட வேண்டாமென்றும் அழைக்கிறார். தாம் திரும்பி வரும் பாதையில் இருப்பதாகவும், அனைவரையும் அன்பு செய்வதாகவும் கூறுகிறார். பகலில் சில நிமிடங்கள் தம்மைச் சந்திக்க வரவும், இதயத்தால் ஜெபிக்கவும் கேட்கிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00 அறிமுகம் 00:13 15/11/1989 - ஓய்வெடுத்தல் – வேதாகம வார்த்தை 01:11 16/11/1989 - என் மலரே, என் நுகம் எளிதானது 03:41 20/11/1989 - என்னை முதலாவதாகக் கொண்டிரு 04:34 22/11/1989 - என் பிரசன்னத்தை உலகிற்கு நினைவூட்டு 06:53 23/11/1989 - ஆன்மாக்களுக்காக ஜெபி, என்னை அன்பு செய் 11:31 26/11/1989 - சமாதானம் உன்னோடு; தைரியம் கொள் 12:44 27/11/1989 - என் சிலுவையை அணைத்துக்கொள் 14:14 28/11/1989 - என்னைக் கைவிடாதே, எனக்கு ஓய்வுகொடு “இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார். நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார். இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை, போட்காஸ்ட் கேட்க: * ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj * ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752 * மேலும் தகவல் அறிய: https://tlig.org இன்றே இணையுங்கள்! #TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #இயேசுவின்பிரசன்னம் #என்னைபுறக்கணிக்காதீர்கள் #TrueLifeInGodTamil
அத்தியாயம் 107 நவம்பர் 15, 1989 நான் ஓய்வெடுப்பதற்கு சற்று முன், குறிப்பு: "உறங்குதல்" என்று சொல்லுக்குப் பதிலாக, "ஓய்வெடுத்தல்" என்ற வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். உறக்கம் என்ற வார்த்தை எனக்கு ஒவ்வாததாக ஆகிவிட்டது, ஏனெனில் இயேசு வந்து என்னை எழுப்பும் வரை நான் பல ஆண்டுகள் உறங்கிக் கொண்டுதான் இருந்தேன். இயேசுவிடம் இன்னும் ஒரே யொரு வார்த்தை மட்டும், ஆனால் வேதாகமத்திலிருந்து எனக்குத் தரும்படி கேட்டேன். அதன்பின் நான் வேதாகமத்தை எவ்வித நோக்கமுமின்றித் திறந்தபோது, இயேசு வேதாகமத்தின் வழியாக இப்படி என்னிடம் கூறினார்: "நான் இன்னும் உங்களுக்குச் சொல்ல வேண்டிய காரியங்கள் பல உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் இப்போது நீங்கள் தாங்க மாட்டீர்கள் (அருளப்பர், 16ஆம் அதிகாரம், 12ஆம் இறைவார்த்தை). (இதை என்னிடம் சொன்னபோது, புனிதமான நகைச்சுவையின் சுவடு ஒன்றை நான் கவனித்தேன்...) நவம்பர் 16, 1989 ஆண்டவரா? நான் என் கண்களை உம்மிடம் ஏறெடுக்கிறேன், நான் என் ஆன்மாவை உம்மிடம் உயர்த்துகிறேன், என் மீட்பரே, நான் உமக்காக ஏங்குகிறேன், உமது பரிசுத்த பிரசன்னம் என் இன்பம், ஓ, என் நோக்கத்தை எடுத்துக்கொண்டு, என்னை ஆதரித்துக் காப்பாற்றும்! என் மலரே, அன்பு உன் அருகில் இருக்கிறது; உன் ஆன்மாவின் கண்களைக் கொண்டு என்னைக் காண்பதற்குப் பதிலாக, உன் விசுவாசத்தைக் குறைத்துக் கொள்ளாதே, என்னைப் பார்த்துப் புன்னகை செய், அது என்னை மகிழ்விக்கிறது; ஆ என் குழந்தாய், வந்து என் நுகத்தை எடுத்துக்கொள்; என் நுகம் எளிதும், என் சுமை இலகுமாக இருக்கிறத; நான் உனக்குக் கற்பித்த முறையில், உன் இதயத்தைக் கொண்டு ஜெபி; ஜெபித்து, என் உதவிகளைக் கேட்பது அவசியமானது, அது என் சட்டமாக இருக்கிறது; ஒவ்வொரு நிமிடமும் என் புனித இருதயத்திற்குள் நுழை, நான் உன்னைத் தேற்ற ஏங்குகிறேன், நான் உனக்கு ஓய்வளிக்க ஏங்குகிறேன், என் தாய் உனக்குக் கற்பிக்க அவர்களை அனுமதி; (நம் பரிசுத்த அன்னை:) என் வசுலா, நான் உன் அருகில் இருக்கிறேன்; இதைப் பற்றி நிச்சயமாயிரு; என் திருமகனை அன்பு செய்வதன் மூலம் அவருக்கு ஆறுதல் கொடு, இயேசுவிடம் பேசி அவரை முதலாவதாகக் கொண்டிருப்பதன் மூலம் அவருக்கு ஆறுதல் கொடு; எங்கள் கரங்களை ஒருபோதும் விட்டுவிடாதே; எங்களோடு சேர்ந்து ஓடிவா; அவரை ஆராதி, அன்போடு அவருக்காக நற்செய்தி அறிவி; அவரை நம்பு, நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படாதே, நாளைய தினம் தன்னைப் பற்றிக் கவலை கொள்ளும், உன் இடமோ வலமோ பாராதே, அவருடைய தெய்வீக சாயலை உத்தமமான முறையில் பிரதிபலிக்கும் ஒரு சிருஷ்டியாக உன்னை அவர் உருவாக்கும்படி, நீ உன்னை முழுமையாகக் கையளிக்க வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். இந்த தெய்வீக சாயலை நீ வாழும் இந்தக் காலம் இழந்துவிட்டது. இயேசுவும், நானும் எங்கள் செய்திகளைக் கொண்டு உங்களைத் தீர்ப்பிடுவதற்காக இறங்கி வரவில்லை, உங்களுக்குத் தண்டனை அளிப்பதற்காகவும் நாங்கள் வரவில்லை. உங்கள் அனைவரையும் எங்களிடம் திரும்பக் கொண்டு வந்து, உங்கள் அனைவரையும் தெய்வீகப் பிறவிகளாக்குவதற்காகத்தான் மிகுந்த அன்போடும், இரக்கத்தோடும் நாங்கள் உங்களிடம் வருகிறோம்; நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன், நான் உன்னுடன் இருக்கிறேன்; புனித அன்னையே, நானும் உங்களை வாழ்த்துகிறேன். ஆமென். நவம்பர் 20, 1989 ஆ வசுலா! புரிந்துகொள், நான் உனக்கு என்ன தந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்! வா, நானும் நீயும், நீயும் நானும்; மகளே, என்னை முதலாவதாகக் கொண்டிரு; உன்னிடமிருந்து நான் கேட்பது எல்லாம் அன்பு மட்டுமே; கடவுளின் அன்பு மகனும், உங்கள் மீட்பருமான இயேசு கிறீஸ்துவாகிய நான் உங்களிடம் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன், பார்த்தீர்களா? நான் ஏற்கனவே என் திரும்பி வருதலின் பாதையில் இருக்கிறேன்; விரைவில் நீங்கள் என் காலடிகளை மேலும் மேலும் அதிகத் தெளிவாகக் கேட்பீர்கள், ஏனெனில் நான் உங்கள் அனைவரையும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறேன்; நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன்; ஒன்றாயிருங்கள்; நவம்பர் 22, 1989 ஆண்டவரே, தயவுசெய்து, வேதாகமங்களின் வழியாக என்னுடன் பேசும், (நான் நோக்கமின்றி வேதாகமத்தைத் திறக்கிறேன். அதில் வந்த வாசகம்: பரிசுத்த ஆவியானவர் உம்மீது வருவார்). " குறிப்பு: லூக்கா 1ஆம் அதிகாரம், 35ஆம் இறைவார்த்தை. மகளே, என் பிரசன்னத்தை உலகிற்கு நினைவூட்டு; என் செய்தியை உலகின் எல்லைகளுக்கு அறிவி; ஜெபி, நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்... நான் உனக்கு உதவுவேன்; குறிப்பு: நான் வார்த்தைகள் கிடைக்காமல் தயங்க, ஆண்டவர் என் உதவிக்கு வந்தார். தந்தையே, தயவுசெய்து, உம் அன்பை எனக்கு வெளிப்படுத்தும், ஏனெனில் உம் அன்பை வெளிப்படுத்துவதில், நீர் உம் பரிசுத்த முகத்தை எனக்கு வெளிப்படுத்துகிறீர். என்மீது ஒளிவீசும், யாரும் என்னை ஏமாற்ற விடாதேயும், என் வழிகாட்டியாகவும், என் குருவாகவும், எனக்குக் கற்பிப்பவராகவும் இரும், ஞானத்தின் உதடுகளிலிருந்து நான் கற்றுக் கொள்வேனாக, ஆமென். பார்த்தாயா? என்னுடைய உதவியை நீ கேட்டால் போதும், அதற்கு மேல் நான் காத்திருக்க மாட்டேன், வா, நீ இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறாய், ஆனாலும் என் அருகில் தங்கியிரு, நீங்கள் ஒவ்வொருவரும் நான் மிக அதிகமாக வற்புறுத்துகிற என் பிரசன்னத்தை நினைவுகூருங்கள், என் பிரசன்னம் ஒரு பரம இரகசியமாகவும் இருக்கிறது; என்னை அலட்சியம் செய்துவிடாதீர்கள்... நான் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன்... குறிப்பு: நான் இடைமறித்து ஏதோ சொல்ல முயன்றிருந்தேன். நான் உங்களைத் தேற்றுபவராக இருப்பேனாக; ஆண்டவராகிய நான் அருள் வரங்களாக உங்களுக்கு என்ன தந்து கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் முழுவதுமாக உணராவிட்டாலும், நான் இறுதிவரை உங்களை வழிநடத்துவேன்; நான் என் அளவற்ற இரக்கத்தின் காரணமாக, என் ஆவியால் உங்களை இடைவிடாமல் நிரப்புவேன், உங்களுக்குள் என் வார்த்தைகளையும், என் சட்டத்தையும் ஊற்றி, உங்களை என்னிடம் உயர்த்துவேன்; ஆண்டவர்களுக்கெல்லாம் ஆண்டவராகிய நான் உங்களை எப்போதும் கூர்ந்து கண்காணிக்கிறேன்; என் சமாதானத்தையும், என் அன்பையும் கொண்டிருங்கள், நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன், நல்லவர்களாக இருங்கள்; நவம்பர் 23, 1989 என் அரசரே, ஆன்மாக்கள் ஒரே தேவநற்கருணைப் பேழையைச் சூழ்ந்திருந்து உம்மை மகிமைப்படுத்துமாறு, உண்மைக்கு ஒவ்வொரு ஆன்மாவையும் நடத்திச் செல்லும்; கேட்டும், கேட்டும் புரிந்துகொள்ளாதவர்களும் இந்த முறை புரிந்துகொள்வார்களாக, கண்டும் கண்டும் உணராதவர்கள் உம் பரம இரகசியத்தினுள் நுழைந்து, இந்த முறை உணர்ந்து கொள்வார்களாக, அவர்கள் தங்கள் மனதால் அன்றி தங்கள் இதயத்தால் புரிந்துகொண்டு, அதன் மூலம் மனந்திரும்பி, உம்மால் குணப்படுத்தப்பட்டு, என் அரசராகிய உம்மைப் போற்றித் துதிக்குமாறு, அவர்களுடைய இருதயங்களை இளகச் செய்யும். ஆமென். என் குழந்தாய், நான் மரித்தோரையும் கூட உயிரோடு எழுப்புவேன்; என் சித்தத்தைப் புரிந்துகொள்ளாத இந்த ஆன்மாக்களுக்காக ஜெபி; என் போதனைகளில் நிலையாயிரு, என் வழிகளில் உறுதியாயிர, என் திருவுடலின் மீது காயங்களை உண்டாக்குபவர்களை அதைரியப்படுத்து; என் எதிரிகளாகிய உன் எதிரிகளைக் கருணையோடு நடத்து, ஆனாலும் அதே சமயத்தில் அவர்களுக்குக் கண்டிப்பான முறையில் கற்பி; என் குழந்தாய், நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நான் வழிநடத்துவேன்; உன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனதோடும் என்னை அன்பு செய்; ஏனெனில் அப்படிச் செய்வதில் நீ உன் இறைவனாகிய என்னைக் காண்பாய்; மகளே, பகலில் ஒரு சில நிமிடங்களாவது, நான் உனக்குக் கற்பித்துள்ளபடி என்னை சந்திக்க வா, அது என்னை மகிழ்விக்கிறது, அனைவரிலும் அதிகப் பிரியத்திற்குரிய ஆன்மாவே, உன் அன்பை எனக்குத் தா, நான் என் அன்பை உனக்குத் தரவில்லையா? நான் உனக்கு உணவளிப்பவரும், உன்னை நிரப்புபவரும், உன்னைத் தேற்றுபவரும், உன்னை ஆதரித்துக் காப்பவரும், உன்மீது அக்கறை கொள்பவரும், உன் ஆன்மாவை என்னிடம் உயர்த்துபவருமாகிய உன் மணவாளராக இல்லையா? அனைவரிலும் அதிகப் பிரியமுள்ள ஆன்மாவே, நானே மற்ற அனைவரிலும் உன்னை அதிகமாக நேசிக்கிறவர்; எனக்குத் தெரியும், என்றாலும் நான் இந்தப் பணிக்காக உனக்குப் பயிற்சி தந்து, உன்னை உருவாக்கியிருக்கிறேன், குறிப்பு: நான் இயேசுவிடம் ஒரு காரியம் சொன்னேன். நீ சோர்வாயிருக்கும்போது என் மீது சாய்ந்துகொள், நான் உன்னைத் தூக்கிக் கொள்வேன்; மலரே, என் திருப்பெயரால் நீ செய்வதெல்லாம் என்னை மகிமைப்படுத்துகிறது; என்னிடமிருந்து உண்ணு; நான் உன்னை நேசிக்கிறேன், என்னை நேசிப்பதற்காகவே உன்னைப் படைத்திருக்கிறேன். எனக்கு ஓய்வளிக்கும்படி நான் உன்னைப் படைத்திருக்கிறேன். என்னிடமுள்ள எல்லாவற்றையும் நீ என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காக நான் உன்னைப் படைத்திருக்கிறேன்; உங்கள் மீது பாரமாக விழுந்துள்ள தமது நீதியைத் தணிக்கும்படி பிதாவிடம் ஜெபி; குறிப்பு: நம் தலைமுறை. அவரை நேசிப்பதன் மூலமும், உங்கள் இதயத்தைக் கொண்டு ஜெபிப்பதன் மூலமும், உபவாசமிருப்பதன் மூலமும், மனம் வருந்தி, உங்கள் பாவங்களை சங்கீர்த்தனம் செய்வதன் மூலமும் அவருடைய கோபத்தைத் தணியுங்கள்; சமாதானம் மற்றும் பரிசுத்தத்தனத்தின் உலகிற்குள் நுழையுங்கள், என் தெய்வீகத்தைப் பிரதிபலித்தபடி பரிசுத்தமாக வாழுங்கள்; என் வசுலா, நான் உன்னை விடுவித்திருப்பதால், இப்போது நீ மகிழ்ச்சியா யிருக்கிறாயா? ஆம், ஆண்டவருக்கு மகிமையுண்டாவதாக! அப்படியானால், என் மகிமைக்காக உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதிப்பதன் மூலம் என்னை மகிழ்வி; கவனி; உன்னிடமிருந்து பரித்தியாகங்களும், துன்பங்களும், மிகுந்த பொறுமையும் எனக்குத் தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள், ஆனாலும் எதுவும் வீணாய்ப் போகாது; என் மகிமைக்காக மற்றொரு சிறிய பாடுபட்ட சுரூபமாக மாறும்படியாக நான் உன்னை உருவாக்கியிருக்கிறேன் என்பதை நினைவில் வை; ஒவ்வொரு சிறு பாடுபட்ட சுரூபமும் ஓர் ஒளித் தூணாக மாறுகிறது, அது இவ்வாறு உங்களைச் சூழ்ந்துள்ள இருளைக் குறைக்கிறது; இப்போது ஓர் அரசராக என்னை நடத்து, ஆன்மாக்களை எனக்குக் கொடு, நான் ஆன்மாக்களுக்காக தாகமாயிருக்கிறேன்; நான் உனக்கு உதவுவேன், ஞானம் உனக்குக் கற்பிக்கும்; என் அருகிலேயே இருந்துகொள், என் பிரசன்னத்தை நினைவில் வைத்திரு; இயேசுவாகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன், என்னை நேசி. நவம்பர் 26, 1989 குழந்தாய், சமாதானம் உன்னோடு இருப்பதாக; நான் சொல்வதைக் கேள், விவேகமுள்ளவளாக இரு, இந்த வெளிப்பாட்டிலிருந்து வராத காரியங்களைக் கூறாதே; இந்த வெளிப்பாட்டிலும், பரிசுத்த வேதாகமத்திலுமுள்ள என் வார்த்தைகளைப் பயன்படுத்து; நான் உன் ஆசிரியர், விவேகத்துடன் இரு, என்னைச் சார்ந்திரு, நான் உன் மீட்பராக இருக்கிறேன்; நான் உன் பரிசுத்தராக இருக்கிறேன், நானே இருக்கிறவர், ஆகவே ஏன் என்னைச் சார்ந்திருப்பதில்லை? நீ என்னைப் பார்த்துப் புன்னகிக்கும் போது என்னை மகிழ்விக்கிறாய்; நான் குழந்தைத்தனமான விசுவாசத்தை நேசிக்கிறேன்; வசுலா, தைரியம் கொள், நான் என் எதிரிகள் அனைவரையும் துரத்தி யடிப்பேன்; மகளே, தைரியம் கொள், அந்நிய நாட்டிலும், மரணப் பள்ளத்தாக்கிலும் வசிப்பது கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனாலும் என் அன்பைப் பற்றி நிச்சயமா யிரு; நான் உன் அருகில் இருக்கிறேன், மிக அற்பமான காரியங்களிலும் கூட நான் உனக்கு உதவுவேன்; அன்பு உன்னை அன்பு செய்கிறது; நவம்பர் 27, 1989 ஆண்டவரே, என் பலமாயிரும், நான் உம் சிலுவையை இறுதி வரை அணைத்துக் கொள்வேன். நீர் எனக்குத் தந்து கொண்டிருக்கிற எல்லாவற்றிற்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். என் புனித இருதயத்தின் வசுலா, என் சமாதானத்தைக் கொண்டிரு; அஞ்சாதே, நான் உனக்குத் தந்துள்ள தனிப்பட்ட கொடை, நான் வந்து உன்னை எடுத்துச் செல்லும் நாள் வரைக்கும் நீடித்திருக்கும்; இம்முறையில் உனக்கு உணவளிக்க நான் சித்தமாயிருப்பது பற்றி மகிழ்ச்சியாயிரு! இந்தக் கொடையை இறுதிவரை உனக்கென விட்டு வைக்க நான் சித்தமாயி ருக்கிறேன் என்பதற்காக மகிழ்ச்சியா யிரு! நான் இவ்வளவு உயர்வாக உனக்கு உபசாரம் செய்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியா யிரு! மகளே, நான் உனக்கு மீண்டும் உயிரளித்திருக்கிறேன் என்பது பற்றி மகிழ்ச்சியா யிரு! நீ எனக்குத் தந்து கொண்டிருக்கிற இந்தச் சிறிய விசுவாசத்திற்காக நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; என் சிலுவையை எடுத்துக்கொள், என் சிலுவையை அணைத்துக் கொள், என் சிலுவை உன் வாழ்வாக இருக்கிறது; நாசரேத்தூர் இயேசுவாகிய நான் உன்னையும், என் செய்தியைப் பரப்ப உழைக்கும் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன், நான் அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன்; வா, நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே. நாங்கள், நாம்? ஆம், பரிசுத்த அன்னையே. நவம்பர் 28, 1989 என் இயேசுவா? நான்தான்; அன்பு உன் அருகில் இருக்கிறது, என் குழந்தாய், என் சிலுவையை எடுத்துக்கொண்டு, எனக்கு ஓய்வுகொடு; அன்பு சோர்ந்து போயிருக்கிறது, அதற்கு ஓய்வு தேவை; ஆ என் குழந்தாய், என்னைக் கைவிடாதே; நான் உன்னில் கல்வியறிவுகளையும், பகுத்துணர்தலையும் ஊற்றுவேன், நீ ஒவ்வொரு நாளும் உன்னை முழுமையாகக் கையளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், ஏனெனில் வேறு எந்த முறையில் நான் என் சித்தத்தை உன்னில் செயல்படுத்துவேன்? வா, என் பிரசன்னத்தை நினைவில் வைத்திரு; அன்பு உன்னை ஆசீர்வதிக்கிறது;