இறைவனில் உண்மையான வாழ்வு · இறைவனில் உண்மையான வாழ்வு
அத்தியாயம் 106: திருச்சபை மறுவாழ்வு பெறும் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு அச்சுறுத்தலோடு அல்ல, மனந்திரும்பும்படி கேட்கவும் இரக்கத்தோடும் அன்போடும் திரும்பி வருவதாகச் சொல்கிறார். திருச்சபை மீண்டும் உயிர் பெறும் என்றும், உயர்பதவிகளில் இருக்கும் போலிகளை வெளியே தூக்கியெறிவேன் என்றும், ரஷ்யாவை உயிர்ப்பிப்பேன் என்றும் கூறுகிறார். பலவீனமான வசுலாவைத் தேர்ந்தெடுத்ததையும் விளக்குகிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00 அறிமுகம் 00:13 06/11/1989 - என் தந்தையின் கோபம் தணிகிறது 01:25 07/11/1989 - பலவீனமான கருவிகளைத் தேர்ந்தெடுத்தேன் 03:25 08/11/1989 - என் திராட்சைத் தோட்டங்களை விரிவுபடுத்துவேன் 07:59 09/11/1989 - எழுத்துக்களின் வழியாக நான் வந்தேன் 13:27 13/11/1989 - திருச்சபை மீண்டும் உயிர் பெறும்; ரஷ்யா 20:41 14/11/1989 - அவசரப்படாதே, ஜெபத்தை தியானி “இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார். நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார். இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை, போட்காஸ்ட் கேட்க: * ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj * ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752 * மேலும் தகவல் அறிய: https://tlig.org இன்றே இணையுங்கள்! #TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #திருச்சபைமறுவாழ்வு #ரஷ்யாஉயிர்ப்பு #TrueLifeInGod
அத்தியாயம் 106 நவம்பர் 6, 1989 மகளே, சமாதானம் உன்னோடு இருப்பதாக; என்னை அன்பு செய்யும் ஒவ்வொரு ஆன்மாவும் தன் கடந்த கால பாவங்களுக்காகப் பரிகாரம் செய்கிறது; இந்த ஆன்மாக்களிடமிருந்து நான் பெற்றுக் கொள்கிற அன்பும், மனஸ்தாபமும் காயப்படுத்தப்பட்ட என் இருதயத்தைத் தேற்றி, என் தந்தையின் நீதியைத் தணித்து, அவரை சாந்தப் படுத்துகிறது; அவருடைய கடுஞ்சினத்தைத் தணியுங்கள், ஏனெனில் உங்கள் முயற்சி களை அவர் காண்கிறார், உண்மையில் உங்கள் நல்ல கருத்துக்கள் அனைத்தையும் அவர் தம் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்; நீங்கள் பலராக இல்லை, ஆனாலும் அந்த மிகச் சில ஆன்மாக்களுக்காகவும் கூட, என் தந்தையின் திருக்கரத்தின் கோபம் தணிகிறது; விசுவாசம் கொண்டிரு, ஜெபி, நீ கேட்பதைப் பெற்றுக் கொள்வாய் என்று விசுவசி; என்னில் நம்பிக்கை கொண்டிரு; நான் உயிர்த்தெழுந்திருக்கிறேன், உன் மீட்பு என்னிடமிருந்து வருகிறது; என்மீது எப்போதும் ஆசை கொள், நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; நவம்பர் 7, 1989 என் இயேசுவா? நான்தான்; சமாதானம் உன்னோடு இருப்பதாக; நான் உனக்குக் கற்பித்துள்ள முறையில் என்னைப் பெற்றுக்கொள்; மலரே, என்னை நேசி, என்னைக் கிரகித்துக் கொள், என்னைப் பெற்றுக் கொள், என் புறாவே, என் பிரதிபலிப்பாக இரு; என் ஆண்டவரே, எழுத்துப் பிழைகள் ஏன் வருகின்றன என்பதை நான் புரிந்து கொள்ளச் செய்யும். வசுலா, இவை உன்னுடையவை, என்னுடையவை அல்ல; நீ குறைவுள்ளவள், பல பலவீனங்களைக் கொண்டுள்ளவள் என்பதால்தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்; இறைவனாகிய நான் என் கருவிகளைப் பலவீனமானவையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், எனெனில் பலவீனத்தில்தான் என் வல்லமை சிறந்து விளங்குகிறது; இருந்தாலும், அவ்வப்போது எனக்குத் தெரியாத வார்த்தைகளை நீர் எனக்குத் தருகிறீர். தேவை வரும்போது அப்படிச் செய்கிறேன்; நான் உன்னை எழுத வைத்துக் கொண்டிருக்கிறேன், இது என் கையெழுத்து என்று நம்புவது தவறு; அப்படியானால் ஆண்டவரே, எழுதுவதில் ஏன் இந்த வேறுபாடு? இப்படிச் செய்வதை நான் விரும்புகிறேன்; என் கருவிகளுக்கு என் அறிவை எழுதத் தருவதற்காகவும், என் வார்த்தையைக் கொண்டு அவர்களையும் மற்றவர்களையும் உண்பிப்பதற்காகவும், அவர்களது சகல குறைபாடுகளோடும், பலவீனங்களோடும், அவர்கள் இருக்கிறபடியே நான் அவர்களைப் பயன்படுத்துகிறேன்; அவர்களில் எவ்வளவு அதிகமானோர், பல சமயங்களில் உருவகத் தன்மை கொண்டவையாக இருக்கிற என் வார்த்தைகளை, அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் இது மீண்டும் அவர்களுடைய பலவீனத்தையும், அவர்களுடைய கீழ்ப்படிதலையும், என்னில் அவர்களுக்குள்ள குழந்தைக்குரிய விசுவாசத்தையும், என்னை மகிழ்விக்க அவர்களுக்குள்ள ஆசையையும் பிரதிபலிக்கிறது; துன்பங்கள் வரும்போது, திடமாக நிற்கும் மனிதன் பேறுபெற்றவன்; குறிப்பு: யாகப்பர் ஆகமம் 1ஆம் அதிகாரம் இறைவார்த்தை 12 நவம்பர் 8, 1989 என் வசுலா, என் மீது சாய்ந்துகொள்; என்னை மகிழ்வி, உன் பிரமாணிக்கத்தின் வார்த்தைப்பாட்டைப் புதுப்பி; என் இரட்சகரும், ஆண்டவருமானவரே, உமக்கு என் பிரமாணிக்கத்தின் வார்த்தைப்பாட்டை நான் புதுப்பிக்கிறேன், அதைக் கடைப்பிடிக்க எனக்கு உதவும், உமக்குப் பிரமாணிக்கமாக இருக்க எனக்கு உதவும். ஆண்டவரே நீர் எனக்குப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறீர். நீர் என் ஆத்துமத்தை உம்மிடம் உயர்த்தி, உம் ஒளியில் நான் வாழ என்னை அனுமதித்திருக்கிறீர். நீர் உம்முடைய மகத்துவமுள்ள கொடைகளைக் கொண்டு என் நிர்வாணத்தை மூடியிருக்கிறீர். நீர் என்னைப் புதுப்பித்திருக்கிறீர், லாசரை உயிர்ப்பித்தது போல், என்னையும் நீர் உயிர்ப்பித்திருக்கிறீர். என்னை விடுவித்தீர், நான் உம்மை நேசிக்கிறேன், ஆராதிக்கிறேன். என் இதயத்தின் அன்புக்குரியவளே, என் மீது சாய்ந்துகொள்; நானும் நீயும், நீயும், நானும்; நாம் ஒன்றாக என் சமாதானம் மற்றும் அன்பின் சிலுவையைப் பகிர்ந்து கொள்வோம்; ஆ வசுலா, நீ இப்போது எனக்குச் சொந்தமானவள், நீ விடுவிக்கப்பட்டவளாகவும், உயிருள்ளவளாகவும் இருக்கிறாய்! கேட்டு எழுது; என் திராட்சைத் தோட்டங்களை இப்போது நான் இன்னும் விரிவுபடுத்துவேன், ஏனெனில் இந்தத் தலைமுறையினர் மிகவும் ஆன்மீகமற்றவர்களாக, தங்கள் இடக்கரத்தினின்று வலக்கரத்தைப் பிரித்தறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் திரை மறைவிலும், இருளில் வாழ்கிறார்கள், நான் இந்த முறையில் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன்; நான் விரைவில் திரும்பி வருவேன், என்னைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது; மிருகத்தின் வல்லமையின் கீழ் தங்கியிருப்பவர்கள் என் திராட்சைத் தோட்டங்களை மிதித்து அழிக்கும்படி ஒரு பெருநெருப்பாக அனுப்பப்படும் போதும் கூட, நான் என் வல்லமையைக் கொண்டு என் திராட்சைத் தோட்டங்களை இன்னும் அதிகமாக விரிவுபடுத்திக் கொண்டே யிருப்பேன்; இது பரிசுத்தர்களுக்கும், படுகுழியிலிருந்து எழுந்து வரும் வீழ்ச்சியுற்ற தூதர்களுக்கும் இடையில் நடக்கும் பரிசுத்த போராக இருக்கிறது; மேலும், இந்தப் போரின் பாரத்தை பூமி உணர்கிறது, என் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிப் பதினின்று என்னைத் தடுக்க யாராலும் முடியாது; நான் வெறும் வார்த்தைகள் அல்ல; ஆண்டவராகிய நானே வல்லமையாக இருக்கிறேன்; நான் உங்கள் தலைமுறையினரிடம் அச்சுறுத்தல்களோடு வரவில்லை, நீங்கள் மனந்திரும்பும்படி கேட்பதற்காக நான் வருகிறேன்; உங்கள் மீது ஒளிவீச நான் வருகிறேன்; நான் முழு இரக்கமுள்ளவராக உங்கள் மீது இறங்கி வருகிறேன், மாபெரும் அன்போடு நான் என்னிடம் உங்களை எடுத்துக் கொள்வதற்காக வருகிறேன்; ஆண்டவராகிய நான் அன்பு மற்றும் இரக்கத்தின் இறைவனாக இருக்கிறேன்; ஆண்டவராகிய நானே உங்கள் வறண்ட நிலங்களை திராட்சைத் தோட்டங்களாக மாற்றுபவர் என்பதைப் புரிந்து கொள்வதில் மந்தமாக இராதீர்கள்; இப்போது சிறிது காலம் மட்டும்தான், மிகச் சிறிது காலம் மட்டும்தான், அப்போது நீங்கள் யாருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவர் வந்திருப்பார்; நான் தாமதிக்க மாட்டேன், என் வேளை அண்மையி லுள்ளது; சமீபத்தில்தான் என் திரும்பி வருதலுக்கான வாக்குறுதியை நான் உங்களுக்குத் தந்தேன், முற்றிலும் அதிகார பூர்வமாக நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் உங்களிடம் திரும்பி வந்து கொண் டிருக்கிறேன்; அன்பு திரும்பி வந்து கொண்டிருக்கிறது; அன்பு அன்பாகவே உங்களிடம் திரும்பி வரும்; ஆண்டவராகிய நானே அன்பாக இருக்கிறேன், நான் உங்கள் மத்தியில் வசிப்பேன்; முயற்சி செய்து புரிந்து கொள்ளுங்கள், காலங்களைப் பகுத்தறிய முயலுங்கள்; நீங்கள் மனந்திரும்பி, உபவாசமிருந்து, இடைவிடாமல் ஜெபிக்கவில்லையென்றால், என் ஒளியைக் காண முடியாதவர்களா யிருப்பீர்கள் என்று நான் முற்றிலும் அதிகாரபூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன; இன்னும் நேர மிருக்கும்போதே என் கனிகளை உண்ணுங்கள்; மனந்திரும்பி பரிசுத்தமாக வாழுங்கள், ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்; என் பரிசுத்த ஆவியானவர் மனித குலத்தின் மீது தொடர்ந்து பரவுவார்; காலங்களின் அடையாளங்களை வாசித்தறியுங்கள்; நான் எல்லாக் காலங்களிலும் பிரசன்னமா யிருக்கிறேன்; மகளே, வா, அன்பு உன்னை அளவற்ற விதமாக அன்பு செய்கிறது; நவம்பர் 9, 1989 (நான் தப்பறையில் இருப்பது பற்றிய அச்சத்துடன் ஆண்டவரிடம் இம்முறையில் மீண்டும் வருகிறேன். எப்படியோ நான் இதையெல்லாம் கிரகிக்காமலும் புரிந்து கொள்ளாமலும் இருப்பதாகத் தோன்றுகிறது, நான் மறுபடியும் ஒரு துன்ப சோதனையைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறேன், இருந்தாலும் நீர் எனக்குக் கற்பித்துள்ள இந்த வழியில் நான் உம்மிடம் வருகிறேன்.) இயேசுவா? நான்தான்; சமாதானத்துடன் இரு; என் வசுலா, நான் உனக்குத் தந்திருக்கிற பரிசையாரும் எடுத்துக் கொள்ள விட்டுவிடாதே; என் ஆண்டவரே, அப்படி நடக்க அனுமதிக்காதீர்! அப்படி நடக்க நான் அனுமதிக்க மாட்டேன், ஆனாலும் என் போதனைகளை மனதில் கொண்டிரு; ஆண்டவராகிய நான் உன்னிடம் எப்படி வந்தேன் என்பதை மனதில் கொண்டிரு; இயேசுவே, என் அச்சங்களை நீர் அறிவீர். நான் அவற்றை அறிவேன்; நீர் என் கடும் வேதனைகளை அறிவீர். நான் அவற்றை அறிவேன்; சில சமயங்களில் தப்பறையில் இருப்பதாக நான் அஞ்சுகிறேன்! எனக்குத் தெரியும், நான் உன்னைப் பற்றி பரிதாபப்படுகிறேன், என் இருதயத்தோடு உன்னை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொள்ள நான் இன்னும் அதிகமாக ஏங்குகிறேன்; அஞ்சாதே, சமாதானத்துடன் இரு; உன்னிடம் இருப்பது என்னிடமிருந்தே வருகிறது என்று நான் உனக்குக் காட்டுவேன் என்று இன்று நான் உனக்குச் சொல்கிறேன்; பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள், என்னிடமிருந்து கற்றுக்கொள்; நான் சொல்வதைக் கேள், என்மீது சாய்ந்துகொள், உன் நேரத்தை எனக்கு அர்ப்பணி, ஒருபோதும் ஜெபிப்பதை நிறுத்தாதே... குறிப்பு: இங்கே எழுதுவது சற்று நேரம் நின்றிருந்தது. வசுலா, எப்போதிலிருந்து நீ என்னை அன்பு செய்கிறாய்? எழுதத் தொடங்கிய நேரத்திலிருந்து நான் உம்மை அன்பு செய்கிறேன், என் காவல் தூதர் தானியேலுக்குப் பிறகு, நீர் இம்முறையில் என்னை அணுகிய போதிலிருந்து உம்மை நான் அன்பு செய்கிறேன். எழுத்துக்களின் வழியாக நான் உன்னிடம் வந்திருக்கிறேன், எழுத்துக்களின் வழியாகவே நான் உன்னை எழுப்பியிருக்கிறேன்; எழுத்துக்களின் வழியாகவே நான் உன்னை உருவாக்கியிருக்கிறேன்; எழுத்துக்களின் வழியாகவே என் அறிவை நான் உனக்குப் போதித்திருக்கிறேன்; எழுத்துக்களின் வழியாக நான் உன்னை உருமாற்றியிருக்கிறேன்; எழுத்துக்களின் வழியாக கடவுளற்ற பல மனிதர்களை நான் மனந் திரும்பியிருக்கிறேன்; மீண்டும், எழுத்துக்களின் வழியாகவே என் திருச்சபையின் நிலையை நான் உனக்குக் காட்டியிருக்கிறேன்; எழுத்துக்களின் வழியாக என் திரு இருதயத்தை நான் உனக்குக் காட்டியிருக்கிறேன்; நான் உனக்குத் தரும் இந்த பக்தி யார்வம் உன்னுடையது என்றோ, உன்னிமிருந்து வருகிறது என்றோ நீ எப்படி நம்பியிருக்க முடியும்? மலரே! நீ மிக ஈனமானவள் என்பதாலும், என் திருச்சபையிலிருந்து நீ வெகுதூரத்தில் இருக்கிறாய் என்பதாலும்தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்; நீ இறந்து விட்டவளாக இருந்ததால், என் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எந்த ஒரு மனித சக்தியோ, அல்லது மனிதர்களின் பரிசுத்ததனமோ எனக்குத் தேவையில்லை என்று உலகிற்குக் காட்டவே நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்; குறிப்பு: இயேசு அநேகமாக ஒரே மூச்சில் இதெல்லாவற்றையும் சொன்னார்! இது பரிசுத்த வேதாகமம் இப்படிச் சொல்வது போன்றது; ஞானிகளை நாணச் செய்ய மனிதக் கண்களில் மடமையானதையும் வலிமையானதை நாணச் செய்ய மனிதக் கண்களில் பலவீனமானதையும் இறைவன் தேர்ந்துகொண்டார்; எளியவர்கள் என்றும், இழிவானவர்கள் என்றும் உலகம் கருதுபவர்களை -- முற்றிலும் ஒன்றுமில்லாமையாக இருப்பவர்களை அவர் தேர்ந்துகொண்டார். எல்லாமாக இருப்பவர்களை வெட்கப்படுத்தவே அவர் இப்படிச் செய்தார்; அறிஞர்களுக்கும், புத்திசாலிகளுக்கும் இதை மறைத்து, குழந்தைகளுக்கு இந்தக் காரியங்களை வெளிப்படுத்துவதற்காக இன்று வரையிலும் நான் பிதாவுக்கு நன்றி கூறுகிறேன்; குறிப்பு: மத்தேயு 11ஆம் அதிகாரம் இறைவார்த்தை 25. என் குழந்தாய், சமாதானத்தோடு இரு; என் சமாதானம் மற்றும் அன்பின் சிலுவை மனந் திரும்புதலுக்காகவும், அன்பிற்காகவும், சமாதானத்திற்காகவும், ஐக்கியத்திற்காகவும் உலகத்தை நோக்கிக் கூக்குரலிடுகிறது; என் வேலைகளின் நோக்கம் மனித குலத்தை தெய்வீகத்திடம் திரும்பிக் கொண்டு வருவதே; என் வேலைகள் என் இரக்கத்திடமிருந்து வருகின்றன; என் வசுலா, என் திரு இருதயத்திற்குள் நுழைந்து அங்கே ஓய்வெடு; இறைவனை அன்பு செய்வதே விடுதலை; நான் உன்னை விடுவித்திருக்கிறேன்; கடவுளுக்கு மகிமை உண்டாகுக! எங்கள் ஆண்டவர் போற்றப்படுவாராக! நாசரேத்தூர் இயேசுவாகிய நான் உன் அருகில் இருக்கிறேன்; இன்று என் திருப்பயணச் சுரூபத்தின் மூலம் நான் உன்னிடம் வருவேன்; குறிப்பு: இயேசுவின் திரு இருதயத்தின் திருப்பயண சுரூபம், ஒவ்வொரு வீட்டிலும் 9 நாட்கள் தங்கும் ஒரு சுரூபம். நீ என்னிடம் கேட்கும் அருள் வரங்களை உனக்குத் தர நான் ஒருபோதும் தவறுவதில்லை. ஆசீர்வதிக்கப்பட்டவளாயிரு, நான் உனக்கு உதவுவேன்; ஜெபி. ஏனெனில் அது என்னுடன் பேசுவதாக இருக்கிறது, அப்போது நீ சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருப்பேன்; என் சின்ன சம்மனசே, நானும் உன்னுடன் இருக்கிறேன்; நாங்கள் நாம்? குறிப்பு: இது நம் பரிசுத்த அன்னை. என்றென்றும், எக்காலமும். நவம்பர் 13, 1989 என் குழந்தாய், சமாதானம் உன்னோடு இருப்பதாக; அன்பிற்காக அன்போடு நற்செய்தி அறிவி; திருச்சபை மீண்டும் உயிர் பெறும், ஏனெனில் ஆண்டவராகிய நான் திருச்சபையினுள் உயர்பதவிகளில் தங்களை இருத்திக் கொண்ட போலிகளை நான் வெளியே தூக்கி யெறிவேன்; மகளே, என் தலையை ஊடுருவியுள்ள இந்த முட்களை, மிக அதிகமாக இரத்தம் வடிக்கச் செய்யும் இந்த முட்களை அகற்று; மகளே, அவர்களைக் கண்டு பயப்படாதே, ஏனெனில் நான் உன் அருகில் இருக்கிறேன்; மேலும் நான் உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன், என் வல்லமையைக் கொண்டும், என் மாபெரும் இரக்கத்தைக் கொண்டும் நான் இவர்களில் ஒவ்வொருவரையும் வெளியே வீசியெறிவேன்; என் மகளே, மிகவும் நேசிக்கப்படாதவளாக இருக்கிற உன் சகோதரிக்காக வெகு நீண்ட காலமாக துக்கம் கொண்டாடியதை நீ பார்க்கிறாய்; பல வருடங்களாக எங்கள் கசப்பான கண்ணீர்களை நாங்கள் விழுங்கிக் கொண்டிருக்கிறோம்... ஓ ரஷ்யா! வெறும் மாமிச சிருஷ்டியே! தீமை உன் சொந்த கருப்பையில் சுற்றிக் கொண்டது! வெறும் தூசியும், சாம்பலுமான சிருஷ்டியே, மகா உந்நதரான நான் உன்னை உயிர்ப்பிப்பேன், ஏனெனில் நானே உயிர்ப்பாக இருக்கிறேன்; நீ மீண்டும் உயிர் பெறும்படி நான் உன்னைப் பராமரிப்பேன்; உன் மீது என் விரலை வைத்து, நான் முன்பு உருமாறியது போல, உன்னையும் நான் ஒரு மகிமையுள்ள நாடாக உருமாற்றுவேன்; நீ கண்ணைப் பறிக்கும் வெண்ணாடைகளை மகத்துவமுள்ள விதத்தில் அணிந்திருப்பாய், மோட்சம் முழுவதும் தன் துக்க ஆடைகளை வெளியே தள்ளிவிடும், மோட்சத்தின் கசப்பான கண்ணீர்கள் மகிழ்ச்சியின் கண்ணீர்களாக மாறும்; மோட்சம் முழுவதும் உன் உயிர்ப்பைக் கொண்டாடும், உன் பரிசுத்த அன்னையின் பரிந்து பேசுதலுக்காக அவர்களுடைய திருப்பாதங்களின் அருகில் இருந்து, இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருந்த மறைசாட்சிப் புனிதர்கள் அனைவரும், இந்நாளிலும் என் அன்னையோடும், அவர்களுடைய எண்ணற்ற பரிசுத்த தூதர்களோடும் இருப்பார்கள்; இவர்கள் எல்லோரும் உங்கள் குழந்தைகளின் இல்லங்களுக்கு இறங்கி வந்து, அங்கு அவர்களோடு சேர்ந்து தங்கியிருப்பார்கள்; அதன்பின் நான் என் திருச்சரீரத்தை அவர்களுக்கு உணவாக அளிப்பேன், என் திரு இரத்தத்தை அவர்களுக்குப் பானமாகத் தருவேன்; ரஷ்யா என்னைப் போற்றிப் புகழ்ந்தபடி மிகுந்த அன்போடு என்னை உண்டு பருகும்; என் ரஷ்யா உங்கள் காலங்களுக்கும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கும் தன் மாபெரும் மனந்திரும்புதலின் மூலம் உயிருள்ள முன்னுதாரணமாக இருக்கும்; பலரால் மிகவும் அன்பு செய்யப்படாதவளாயிருக்கிற உன் சகோதரி தன் தீய நடத்தை முழுவதையும் துறந்துவிட்டு, தன் முழு வலிமையோடு என்னைத் தன் கடவுள் என்று அழைப்பாள்; வசுலா, உன்னால் கேட்க முடிகிறதா? கவனி... உன் சகோதரியின் குழந்தைகளின் புலம்பலைக் கவனி; குறிப்பு: துன்பப்படும் ரஷ்யாவின் மக்களுக்காக மட்டுமின்றி விவரிக்க முடியாத அளவுக்கு கடவுளின் குரல் சோகமாக ஒலித்ததாலும் நான் அழத் தொடங்கினேன். அவளுடைய குழந்தைகள் புலம்புகிறார்கள், அங்கே அழுகை இருக்கிறது; அழுது கொண்டிருப்பவர்கள் என் ரஷ்யாவின் குழந்தைகள்; மோட்சம் முழுவதும் அவர்கள் துக்கப்பட்டு அழுவது அப்பட்டமாகக் கேட்கிறது; அவர்கள் துன்பத்தைக் கண்டு மோட்சம் ஆழமாக நெகிழ்கிறது, அவளை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதிருந்த நான் இப்போது அவளுடைய இறந்த உடலின் அருகில் இருக்கிறேன், என் கை அவளுடைய குளிர்ந்து போன இதயத்தின் மீது இருக்கிறது. அவளுடைய எலும்புகள் அவளுடைய கல்லறையிலிருந்து மீண்டும் மலரும், அவளுடைய பெயர் ஒரு தனிச் சிறந்த முறையில் புகழ்ந்து பேசப்படும். ஏனெனில் நான் அவளையும், அவளுடைய மகன்களையும், மகள்களையும் அலங்கரிப்பேன்; இவ்வாறு எனக்கும் அவளுக்கும் இடையில் சமாதானம் மற்றும் அன்பின் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டு, முத்திரையிடப்படும்; நான் அவளை அன்பு செய்கிறேன், எப்போதும் அன்பு செய்து வந்திருக்கிறேன்; எனக்கு அவள் காட்டிய பிரமாணிக்கமின்மையாலும், அவளுடைய கொடிய குணத்திலும் கூட, நான் அவளை ஆசீர்வதித்தேன், அவளை ஆசீர்வதித்தேன்; இது என் மகிமையுள்ள புதுமையாக இருக்கும்; சற்று பொறுத்திருந்து பார்; எந்தக் காரணமுமின்றி என்னை வெறுத்து, அந்த வெறுப்பில் உறங்கி விட்டவர்களும் கூட என் மகன்களாக இருப்பதாலும், அவர்கள் இன்னும் அவளுடைய கர்ப்பப்பையில் உயிரோடு வாழ்வதாலும், நான் அவர்களையும் உயிர்ப்பிப்பேன்; இந்த எல்லாக் காரியங்களும் விரைவில் நிகழும்; மகளே, நான் பரிசுத்தர, மகா உன்னதர், நான் மிகப் பரிசுத்த திருத்துவமாக இருக்கிறேன், என்னை மகிழ்வி, இன்று நான் சொல்வதை நீ கேட்டது போல், நான் சொல்வதைக் கேள்; (கடவுள் திருப்தியடைந்தவர் போலத் தோன்றினார்.) நம் திருநிலைப்படுத்தப்பட்டவருக்கு அல்லேலூயா, ஆண்டவரை மகிழ்வியுங்கள், இதய பரிசுத்தத்தனத்தில் அவரைத் தேடுங்கள்; நாங்கள் இடைவிடாமல் உங்களைக் காவல் காக்கும் உங்கள் தேவதூதர்களாக இருக்கிறோம்; குறிப்பு: தேவதூதர்களின் குரல்களிலிருந்து இது வந்தது. கடவுள் உன்னை அன்பு செய்கிறார். தானியேலாகிய நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்; சிறியவளாகவே நிலைத்திரு, ஏனெனில் ஆண்டவரை மகிழ்விப்பது இதுவே! குறிப்பு: என் காவல் தூதராகிய தானியேல். ஆ ஆ தானியேல்... மக்கள் வெளிப்பாட்டையும் என்னையும் அறிந்து கொள்ளத் தொடங்குகிற கூட்டங்களை நான் எப்படித் தவிர்க்க முடியும், நான் எப்படி சிறியவளாக நிலைத்திருக்க முடியும்? பிறரால் காணப்படுவதை நான் எவ்வளவு வெறுக்கிறேன் என்பது உமக்குத் தெரியுமே! வசுலா, சிறியவளாக நிலைத்திருப்பது என்பதன் பொருள்; தாழ்ச்சி யுள்ளவளாகவும், ஆண்டவருக்குப் பிரியமானவளாகவும் நிலைத்திரு என்பதாகும்; நீ ஒன்றுகூட்ட வேண்டும் என்பது ஆண்டவரின் விருப்பம் என்பதை நினைவில் கொள்; குறிப்பு: மாதாந்திர ஜெபக் கூட்டங்கள். அச்சம் கொள்ளாதே; அவருடைய செய்தி அறிவிக்கப்பட வேண்டும்; உலகம் சமாதானத்தின் அரசரிடம் வந்து அவரை சந்திக்க வேண்டியுள்ளது; உன் தலைமுறை கடவுளை அடையாளம் கண்டுகொண்டு, மனந்திரும்ப வேண்டும்; இறைவனின் இரக்கமுள்ள வேலைகளுக்காக நன்றி கூறு; தானியேலாகிய நான் உனக்காக இடைவிடாமல் ஜெபிக்கிறேன்; நீ நல்லவளாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்; அச்சமின்றி அவருடைய அன்பை மனித குலம் முழுவதற்கும் வெளிப்படுத்து; மகா உந்நதர் உன்னையும், இச்செய்தியை நாடுகளுக்கு அறிவிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார்; அன்பு உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறது; நவம்பர் 14, 1989 என் ஆண்டவரா? நான் இன்னும் பெரிய விசுவாசத்தை விரும்புகிறேன். எனக்கு அது தேவைப்படுகிறது. என் வசுலா, வற்புறுத்திக் கேட்காதே, சாதாரணமாகக் கேள்; என் அளவற்ற இரக்கத்தையும், அன்பையும் புரிந்துகொள், ஆகவே இந்த வார்த்தைகளைச் சொல்: என் மீட்பரே, என் அன்பை அதிகரியும், என் விசுவாசத்தை அதிகரியும், என் நம்பிக்கையை அதிகரியும், உம்முடைய தெய்வீக சித்தத்தின்படி இவை அனைத்தும் செய்யப்படுவதாக; ஆமென்; அவசரப்படாதே, நீ எப்போதுமே அவசரப்படுவதாகத் தோன்றுகிறது, ஏன்? குறிப்பு: விரைவில் குறிப்பேடுகளுக்குத் திரும்பி வந்து இயேசுவோடு எழுதுவதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதற்காக என் ஜெபங்களைச் சில சமயங்களில் அவசரமாகச் சொல்லி முடிக்கும்படி நான் சோதிக்கப்படுகிறேன். நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் உன்னை விட்டுப் போய்விடுவேன் என்று நீ நினைப்பதாகத் தோன்றுகிறது, ஆகவே நீ அவசரப்படுகிறாய், ஏன்? அவசரப்படாதே. இந்தத் தனிப்பட்ட முறையில் நான் உன்னோடு இருக்கும்போது நீ சொல்வதை அதிகமாகக் கேட்கிறேன்; உன் வேகத்தைக் குறைத்து, ஜெபத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் தியானி; ஏன் இந்த அவசரம்? நான் உன் ஆசிரியர், நீ என் மாணவி; நான் பகுத்துணர உனக்குக் கற்பித்திருக்கிறேன், நானே உன்னை உருவாக்கிய ஆசிரியர்; நீ என் கட்டளைகளை மறந்துவிட எத்தனிக்கும் போது, நான் அவ்வப்போது உனக்கு நினைவுபடுத்துகிறேன், நான் அபரிமிதமான வெளிப்பாடுகளை உன்னில் தொடர்ந்து பொழிவேன்; வா, நாம் வேலை செய்வோம்;