இறைவனில் உண்மையான வாழ்வு · இறைவனில் உண்மையான வாழ்வு
அத்தியாயம் 105: என் வல்லமையை வெளிப்படுத்த நான் பலவீனத்தை தேர்ந்தெடுக்கிறேன் கடவுள் தம் சித்தத்திற்கு முழுமையான அர்ப்பணத்தைக் கேட்கிறார்; அன்பே வாழ்வின் கோட்பாடாக இருக்கட்டும், ஒருவரை ஒருவர் தீர்ப்பிடாதீர்கள் என்கிறார். "நான் என் வல்லமையைக் காட்ட பலவீனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்" என்று இயேசு வசூலாவிடம் சொல்கிறார். மூன்று இரும்புக் கம்பிகளையும் தம் நெருப்பால் ஒன்றாக்குவேன் என்றும் கூறுகிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00 அறிமுகம் 00:13 25/10/1989 - பரிசுத்த அன்னை ஜெபக்குழுவிற்காக 03:36 26/10/1989 - உன் கிளைகளை கழிக்கிறேன் 06:51 30/10/1989 - என் திருப்பாடுகளின் பாதை 09:01 31/10/1989 - பலவீனத்தையும் வறுமையையும் தேர்ந்தேன் 13:06 02/11/1989 - மூன்று இரும்புக் கம்பிகள் ஒன்றாகும் 14:16 03/11/1989 - என் செல்வங்களின் மீது தாகமாயிரு “இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார். நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார். இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை, போட்காஸ்ட் கேட்க: * ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj * ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752 * மேலும் தகவல் அறிய: https://tlig.org இன்றே இணையுங்கள்! #TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #பலவீனத்தில்வல்லமை #TrueLifeInGod105 #மூன்றிரும்புக்கம்பிகள்
அத்தியாயம் 105. அக்டோபர் 25, 1989. நம் பரிசுத்த அன்னை ஜெபக்குழுவிற்காக. என் சமாதானம் உங்களோடு இருப்பதாக திருச்சபை உயிர் பெறும். வாருங்கள், ஆண்டவரை மகிழ்விப்பவர்களாக இருங்கள். தினமும் உங்களை அவருக்கு ஒப்புக்கொடுங்கள். பக்தியுள்ள குழந்தைகளாக, ஒளியின் மக்களாக உங்களை மாற்ற அவரை அனுமதியுங்கள். உலக காரியங்களிலிருந்து உங்களை விலகிக்கொள்வதன் மூலம் உங்கள் வாழ்வுகளை மாற்றுங்கள். ஏனெனில் என் சிறியவர்களே, உங்கள் ஆன்மா என்றென்றும் வாழும் என்று நான் தொடர்ந்து உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றேன். உங்கள் வாழ்வுகளை மாற்றும்படி திரும்பத் திரும்ப நான் உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறேன். கடவுள் உங்களிடம் விரும்புவதென்ன? நீங்கள் செய்யவேண்டிய மிகச்சிறந்த காரியம் என்ன? உங்கள் அனுதின கையெழுத்தலை உங்களை ஓர் உத்தம சிருஷ்டியாக மாற்றும்படி ஒரு முழுமையான அர்ப்பணத்தை கடவுள் உங்களிடம் கேட்கிறார். நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியம், உங்கள் சித்தத்தை கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிவதாகும். அவரை தேடுங்கள். அவராக இருக்கிற அனைத்தையும் தேடுங்கள். நான் உங்களை இறந்து கேட்கிறேன். பசாசின் கிசுகிசுப்புகளை கவனிக்காதீர்கள். ஒரு நிலையான ஜெபத்தில் உங்கள் ஆத்துமத்தை உயர்த்துங்கள். குழந்தைகளே, நான் உங்களை அன்பு செய்கிறேன். என் கண்கள் ஒரு கணம் கூட உங்களை விட்டு விலகுவதில்லை. எங்கள் செய்திகளிலிருந்து நன்மை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். எங்கள் செய்திகள் உங்கள் பரிதாபத்திற்குரிய ஆத்துமத்தை போஷித்து மீண்டும் அறிவுக்கு உங்களை வழிநடத்துவனவாக. அவை பரிசுத்த வேதாகமத்திற்கும், சத்தியத்திற்கும், வாழ்விற்கும் உங்களை வழிநடத்துவனவாக. பசாசின் வலைகளிலிருந்து உங்களை காப்பாற்ற நான் விரும்புகிறேன். அதிக உயர்வான ஜெபநிலைக்கு உங்கள் ஆன்மாவை உயர்த்த நான் விரும்புகிறேன். என் குழந்தைகளே, இன்றிரவு மிக விசேஷமான முறையில் நான் உங்கள் அனைவருக்காகவும் பிதாவானவரிடம் பரிந்து பேசுவேன். அவருடைய நன்மை தனத்தின் வழியாக பல வரப்பிரசாதங்களை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவர் வரப்பிரசாதத்தில் எவ்வளவு அளவற்ற செல்வந்தராக இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆண்டவரை ஆசியுங்கள். ஆண்டவருக்காக எப்போதும் பசியாய் இருங்கள். உங்கள் கவலைகளை எல்லாம் இறக்கி வைத்து விடுங்கள். அவற்றை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள். அவரில் நம்பிக்கை வையுங்கள். அவர் மீதும், உங்கள் சகோதரர்கள் மீதும் உங்களுக்குள்ள அன்பை கொண்டு அவருடைய அரசை விரிவுபடுத்துங்கள். தீமைக்கு பதிலாக நன்மை செய்யுங்கள். அன்பே உங்கள் வாழ்வின் கோட்பாடாக ஆவதாக. அன்பே உங்கள் வேராக ஆவதாக. உங்கள் எண்ணங்களை பற்றி வெளிப்பாய் இருங்கள். ஒருவரை ஒருவர் தீர்ப்பிடாதீர்கள். ஏனெனில் உங்கள் வழிகள் ஆண்டவரின் வழிகள் அல்ல. மற்றவர்களை எந்தவிதத்திலும் தீர்ப்பிடாமல் தாழ்ச்சியோடு இருப்பதன் மூலம் ஆண்டவரை பிரியப்படுத்துங்கள். உங்களில் மிக சிறியவர்களுக்கும் கூட கடவுளின் அன்பு வெளிப்படுத்தப்படுகிறது. அன்பிற்குரியவர்களே, சமாதானமாய் போங்கள். எங்களை பின்னால் விட்டு விடாமலே உங்கள் வீடுகளுக்குள் செல்லுங்கள். எங்களை உங்களோடு கூட்டிச் செல்லுங்கள். எங்கள் பரிசுத்த பிரசன்னத்தை உணர கற்றுக்கொள்ளுங்கள். நான் என்பதற்கு பதிலாக நாம் என்றும், என்னை என்பதற்கு பதிலாக எங்களை என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன். ஆண்டவர் விரும்புவது போல் ஒன்றாய் இருங்கள். பிளவுபட்டிராதீர்கள். ஏனெனில் பரலோகத்தில் நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள். சமாதானத்தில் இருங்கள். சமாதானத்தில் வாழுங்கள். அக்டோபர் 26, 1989. ஆண்டவரா, நான் துடிப்பில்லாத படகை போல் உணர்கிறேன். நான்தான் மலரி. என் பாதை நேரானது, ஆனால் ஒடுக்கமானது. வெகு சிலரே அதை கண்டுபிடிக்கிறார்கள். என் குழந்தாய், நான் உன் கிளைகளை கழிக்கும் ஒவ்வொரு முறையும் இப்படிப் பெரிய ஆர்ப்பாட்டம் செய்யாதே. நீ அதிக பலமாக வளர்வதற்காகவும், இன்னும் அதிக கனிகள் தருவதற்காகவுமே நான் உன் கிளைகளை கழிக்கிறேன். உன் கனிகளை அதிகரிக்க நான் விரும்புகிறேன். நான் அடிக்கடி உன் கிளை கழிக்கிறேன் என்று என்னிடம் சொல்ல நீ விரும்புகிறாய். குறிப்பு: இது என்னை புன்னகைக்க செய்கிறது. என் குழந்தாய், உனக்கு எது மிகச்சிறந்ததென்று எனக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக நீ உன் சுதந்திரத்தை முழுமையாக எனக்கு கையளித்து விடவில்லையா? ஆம், நான் நித்தியத்திற்குமாக என் சுதந்திரத்தை உமக்கு கையளித்து விட்டேன். ஆன்மாவே, நீ எனக்கு கையளித்துள்ளதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். உன் சித்தத்தை நீ எனக்கு அர்ப்பணிக்காமல் நான் அதை பயன்படுத்தவில்லை. என்னை நம்பு. எப்போதும் என்னில் விசுவாசம் கொள். ஏனெனில் நானே அனைவருளும் அதிக மென்மையானவர். என் குழந்தாய், நிலையாயிரு. நீதிக்காக உழைக்க ஆர்வமுள்ளவளாயிரு. மற்ற ஆன்மாக்களை மனம் திருப்ப, மற்ற ஆன்மாக்களை மனம் திருப்ப ஆவல் கொண்டிரு. சிறியவளாகவே நிலைத்திரு. எந்த ஒரு முடிவும், எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன் என் அறிவுரையை எப்போதும் கேள். மேலிருந்து உனக்கு எப்போதும் உதவி அளிக்கப்படும். பிற்பாடு. என் வசூலா உச்சியில் ஒரு தலையோடு இருக்கிற மூன்று இரும்புக் கம்பிகளை வரை இவை ரோமைக் கத்தோலிக்கர்களையும், ஆர்த்தடாக்ஸ் சபையினரையும், புரோட்டஸ்டாண்ட் சபையினரையும் குறிக்கின்றன. அவர்கள் வளைந்து ஒன்றாக இணைய வேண்டுமென நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் விரைப்பாகவும், தாங்களாகவே வளைய முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே நான் என் நெருப்போடும், என் தீச்சுவாலையின் வலிமையோடும் அவர்கள் மீது வரவேண்டியிருக்கும். அவர்கள் இலகி, வளைந்து, ஒன்றாகக் கலந்து ஒரே உறுதியான இரும்புக் கம்பியாக உருப்பெறுவார்கள். என் மகிமை பூமி முழுவதையும் நிரப்பும். அடிக்கடி பரிசுத்த ஆவியானவரிடம் இந்த ஜெபத்தை ஜெபி. பரிசுத்த ஆவியே வாரும். உம் அன்புக்குரிய மணவாளியாகிய மரியாயின் மாசற்ற இருதயத்தின் வல்லமையுள்ள மன்றாட்டின் வழியாக வாரும். ஆமென். குறிப்பு: எனக்கு காட்டப்பட்ட ஜெபம். இந்த ஜெபத்தோடு என் பரிசுத்த ஆவியானவர் உன்மீது விரைந்து வருவார். என் பரிசுத்த ஆவி உன்மீது பொழியப்படுவதற்காக ஜெபி. அக்டோபர் 30, 1989. மலரே, என் அன்பு தனது பரிசை உனக்குத் தருகிறது. அது என் திருப்பாடுகளே. என் திருப்பாடுகள் அவற்றின் வழியாக சென்று நான் பிதாவை மகிழ்வித்தது போல நீயும் அவரை மகிழ்வி. நான் உன்னை மிகுந்த பற்றுதலோடு நேசிக்கிறேன். நான் என் அன்பை ஆன்மாக்களுக்குக் காட்டும் விதம் இதுதான். உன் வழிகாட்டியாக நான் இருந்து என் திருப்பாடுகளின் பாதையில் உன்னை வழிநடத்த என்னை அனுமதி. எந்த முறைப்பாடும் இன்றி அவற்றைத் தாங்கிக்கொள்ள ஆன்மாக்களுக்கு நான் கற்பிக்கிறேன். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதன் கொள்ளளவுக்குத் தக்கபடி நான் தருகிறேன். வசூலா, அறிந்துகொள். உத்தமத்தனமடைய ஒரே ஒரு பாதைதான் உள்ளது. என் திருப்பாடுகளின் பாதை. அது என் சிலுவை. அன்போடு அதைத் தாங்கு. என் குழந்தாய், எல்லாம் விரைவில் முடிந்து போகும். என்னை ஆராதித்தபடி நீ என் அருகில் இருப்பாய். நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். பிற்பாடு. ஆண்டவரே, உம் அன்பில் எங்களை இரட்சியும். உம் திருமுகம் உம்மை அன்பு செய்பவர்களின் மீது புன்னகைப்பதாக. எங்கள் பாதுகாவலரே, உம் ஆபேல்களிடம் வாரும். எங்களுக்கு நீர் தேவையாய் இருக்கிறீர். என் குழந்தாய், வா. என் அருகிலேயே நிலைத்திரு. எனக்கு மன ஒப்பந்தம் செய்யப்பட்டிரு. நான் உனக்குத் தந்துள்ளது என்ன என்பதைப் புரிந்துகொள். நான் என் இதயத்தையும் என் அன்பையும் உனக்குத் தந்திருக்கிறேன். எனக்கு மன ஒப்பந்தமானவளே, என்னிடம் உள்ளதையெல்லாம் நான் உனக்குத் தருகிறேன். அவ்வப்போது நான் என் கிண்ணத்தை உனக்குத் தருகிறேன். உன்னை உயிரோடு வைத்திருக்கும்படி நான் என் அப்பத்தை உனக்குத் தருகிறேன். என் இடைவிடாத பிரசன்னத்தை உனக்கு நினைவூட்டும்படி என் நறுமணத்தை உனக்குத் தருகிறேன். மகளே, நானும் நீயும் நித்தியத்திற்கும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டவர்களாக நிலைத்திருப்போம். வா. அக்டோபர் 31, 1989. என் ஆண்டவரா. அன்புக்குரியவளே, சமாதானம் உன்னோடு இருப்பதாக. நான் சொல்வதைக் கேள். நான் அன்பைக் கொண்டு கற்பிக்கிறேன். நான் ஞானத்தைக் கொண்டு உனக்கு கற்பித்திருக்கிறேன். நான் உன்னை உயர்த்தி, உன்னை வடிவமைத்திருக்கிறேன். எனக்கு ஆதரவாகவும் என் ஒழுங்கிலும் நிலைத்திரு. என்னிடமிருந்து எல்லாம் வரும். என் போதனைகளில் அசைக்கப்படாதவளாக நிலைத்திரு. என் வசூலா, தீமைக்கு பதிலாக நன்மை செய்து என் பிதாவை மகிழ்விப்பதன் மூலம் அவருடைய கடும் கோபத்தை சாந்தப்படுத்து. உன் அன்பைக் கொண்டு இந்தத் தலைமுறையின் மீது அவர் கொண்டுள்ள கடுஞ்சினத்தை ஆற்று. அன்பிற்காக நீ அன்போடு நற்செய்தி அறிவிக்கும்படியாக உன்னில் என்னை வெளிப்படுத்து. என் குழந்தாய், கடவுள் உன்னுடன் இருக்கிறார். நற்செய்தி அறிவிக்கும் பணி உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நான் என் வல்லமையைக் காட்ட பலவீனத்தையும், என் செல்வங்களையும் ஞானத்தையும் காட்ட வறுமையையும் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உனக்கென ஒருபோதும் எதிலும் உரிமை பாராட்டாதே. ஒன்றுமில்லாமையாகவே நிலைத்திரு. நான் என் வேலையை நிறைவேற்றும்படி இப்போது இன்னும் அதிகமாக உன்னையே ஒன்றுமில்லாமையாக்கிக்கொள். என் ஆண்டவரும் இரட்சகருமா. நான்தான் என் குழந்தாய். சமாதானம். அஞ்சாதே. ஒருபோதும் என் பிரசன்னத்திற்கு அஞ்சாதே. எனக்கு எதிராக நீ கழகம் செய்கிறாய் என்றால் மட்டும் எனக்கு பயப்படு. என்னோடு இராதவன் சிதறடிக்கிறான். இதைப் பற்றி சிந்திப்பாய். உனக்கு நான் தரும் வெளிப்பாடு சிதறடிப்பதில்லை. அது ஒன்று கூட்டுகிறது. என் வெளிப்பாடு உங்களை ஒரே உடலுக்குள் ஒன்று கூட்டுகிறது. என் குழந்தாய், என் சமாதானத்தைக் கொண்டிரு. ஒன்றுமில்லாமையாக நிலைத்திரு. என்னில் நிலைத்திரு. ஆண்டவராகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் தப்பறையில் இருக்கலாம் என்று அவ்வப்போது நான் கொள்ளும் சந்தேகங்களின் காரணமாக இது சொல்லப்பட்டது. நான் எழுத பயன்படுத்தும் சிறு மேஜையின் மீது நான் வைத்திருக்கிற பாத்திமா மாதா சொரூபத்தை நோக்கி நான் சாய்கிறேன். அவர்களுடைய வலது காதுக்கு அருகில் சென்று அவர்களுடைய காதில், "உங்களுக்கு தெரியுமா, நான் காத்துக் கொள்ளும்படி மிக விலை உயர்ந்த ஒன்றை இயேசு எனக்கு தந்திருக்கிறார். அது அவருடைய திருவுடல் மகிமைப்படுத்தப்படுவதோடு தொடர்புள்ளது. அது ஆன்மாக்களின் மீட்போடும் தொடர்புள்ளது. ஆகவே, பிரியமுள்ள அன்னையே, இது எனக்காக நீங்களே வைத்துக்கொண்டு அதை ஆதரித்து பாதுகாக்க முடியுமா என்று கேட்பதற்காக நான் உங்களிடம் வருகிறேன். ஆம், அது ஆண்டவரின் வெளிப்பாடு. நான் அதை உங்கள் கரங்களில் முழுமையாக தந்து விடுகிறேன். இதற்கிடையே நான் இந்த வேலைக்காக என்னை உயிரோடு எழுப்பியவரும், என்னை உருவாக்கியவருமான இயேசுவின் புனித இதயத்தின் வேலையை தொடர்ந்து செய்வேன் என்று கிசுகிசுப்பாக சொன்னேன். விரைவில் இறந்தோர் அவருடைய குரலைக் கேட்டு முற்றிலும் அவருடைய மகிமைக்காக தங்கள் கல்லறைகளை விட்டு வெளியேறுவார்கள். விரைவில் ஒரு நாடு உமது திருப்பெயருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு நாடு உயிர்த்தெழும். ஏனெனில் இது மிக நீண்ட காலத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. என் குழந்தாய், நீ துன்புறுத்தப்பட்டிருக்கிறாய், கவலையாய் இருக்கிறாய், தாக்கப்படுகிறாய் என்றாலும் கடவுளின் அன்பிற்கும் மனித குலத்திற்கும் இடையே எதுவும் தலையிடாது. விவேகமுள்ளவளாயிரு. கடவுளுக்கு கீழ்ப்படி. கடவுள் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை குற்றம் சாட்டும் உரிமை யாருக்கும் இல்லை. கடவுளிடமிருந்து வரும் எல்லா வெளிப்பாடுகளையும் நான் பாதுகாப்பது போலவே இந்த வெளிப்பாட்டையும் நான் பாதுகாப்பேன். பரிசுத்தரில் நம்பிக்கை வை. அவர் தம் வேலைகளை கண்காணிப்பவராக இருக்கிறார். என் வசூலா, கடவுளின் அன்பை எந்த பயமும் இன்றி வெளிப்படுத்து. வா, பிதாவிடம் இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிரு. பரிசுத்த அன்னையே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன். உம்மை வாழ்த்துகிறேன். நவம்பர் 2, 1989. ஆண்டவர் இந்நாட்களில் மூன்று இரும்புக் கம்பிகளை எனக்கு இடைவிடாமல் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த முறை நான் அவற்றை வெளிர் ஆரஞ்சு நிறத்தில் பார்க்கிறேன். ஏனெனில் அவை பழுக்க சிவந்துள்ளவை போல தோன்றுகின்றன. என் வசூலா, என் நெருப்பைக் கொண்டும், என் தீச்சுவாலையின் வலிமையைக் கொண்டும் இந்த இரும்புக் கம்பிகளை நான் இலக செய்வது மட்டுமன்றி என் சுவாசத்தைக் கொண்டு நான் அவற்றை உருக்கி ஒன்றாக்கி என்றென்றைக்கும் ஒரே உறுதியான இரும்புக் கம்பியாக மாற்றுவேன். அதன்பின் நீங்கள் எல்லோரும் என் சித்தம் மற்றும் என் புத்தி பற்றிய முழு அறிவுக்கு வந்து சேர்வீர்கள். ஒரு பரலோக திருச்சபையாகிய இது உங்களுக்கு என் பரிசாக இருக்கும். அது என் மகிமையில் சுடர் வீசும். உங்கள் பாடல்கள் ஒரே தேவ நற்கருணைப் பேழையைச் சுற்றிப் பாடப்படும். உங்கள் ஆவிகளின் நாடு மீண்டும் உருமாற்றமடைந்து ஒரு உயிர்ப்பிக்கப்பட்டு புதுப் பிறப்படையும். மகளே, வா. ஞானம் உனக்குக் கற்பிக்கும். நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். என்னை அன்பு செய். நவம்பர் 3, 1989. என் இறைவனாகிய உம்மைச் சூழ்ந்துள்ள உம் தூதர்களின் பவனியில் நாங்களும் சேர்ந்து கொள்வோமாக. ஏனெனில் நீர் பரிசுத்த திருத்துவத்தில் ஒப்பற்றவராக இருக்கிறீர். அவர்கள் இடைவிடாமல் உம்மைப் போற்றித் துதித்து உமக்குப் பாடல்கள் பாடுகையில் நாங்களும் ஒரே தேவ நற்கருணைப் பேழையைச் சுற்றி இருந்து உமது அற்புதங்களை எல்லாம் அறிக்கையிடுவோமாக. என் ஆண்டவரே, உம் இல்லத்தை நான் நேசிக்கிறேன். உம் இல்லத்தில் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க விரைந்து வாரும். உம் தூதர்களும் உம் புனிதர்களும் எங்களுக்கு முன்மாதிரி ஆவார்களாக. ஓர் ஒப்பற்ற தேவ நற்கருணைப் பேழையைச் சுற்றி இருந்து உம்மை ஆராதிப்பது எப்படி என அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்வோமாக. என் மலரே, எல்லாம் அதனதன் நேரத்தில் நிறைவேற்றப்படும். அதனிடையில் என் தந்தையின் கண்களை மகிழ்விப்பவளாயிரு. உன் அணிகலன்களும் உன் அழகும் உள்ளார்ந்ததாக இருக்கட்டும். ஏனெனில் நான் ஒவ்வொரு இதயத்திலும் மிகத் தீவிரமாகத் தேடிப் பார்க்கிறேன். ஆகவே உன் ஆன்மாவுக்கு ஆபரணங்கள் அணிவித்து அதை அழகுபடுத்துவதன் மூலம் என்னை மகிழ்வி. என் கண்களுக்கு ஏற்புடையவளாக இரு. என்னிடம் இருப்பதெல்லாம் விலை உயர்ந்ததும் உயிருமாக இருக்கிறது. என்னிடமிருந்து பெற்றுக்கொள். என் கருவுளத்திலிருந்து பெற்றுக்கொள். நான் உனக்கு இலவசமாகத் தருகிறேன். என் செல்வங்களின் மீது தாகமாயிரு. என் இருதயத்திலிருந்து முகந்தெடுத்து உன் இதயத்தை நிரப்பிக்கொள். என் வசூலா, என் ஞானத்திலிருந்து நீ கற்றுக்கொண்டதும் என் மென்மையான அறிவுத்திறனைக் கொண்டு உனக்குக் கற்பிக்கப்பட்டதும் உண்மையின் குரலிலிருந்து கேட்கப்பட்டுள்ளதுமான எல்லா காரியங்களையும் தொடர்ந்து செய்துகொண்டிரு. சமாதானத்தில் இரு. என் பிரசன்னத்தை நினைவில் கொள். என் ஆண்டவரே, நான் உம்மை வாழ்த்துகிறேன். நான் உன்னையும் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நான் ஆசீர்வதிக்கிறேன். ஆண்டவரா. நான்தான் வசூலா. விசுவாசத்திற்காக கெஞ்சி மன்றாடு. விசுவாசத்தை அதன் முழுமையில் உனக்குத் தர என்னால் முடியும். ஆண்டவரே, இன்னும் அதிக பலமான விசுவாசத்தை உம்மிடம் முறையான விதத்தில் கேட்பது எப்படி என்று கூட எனக்கு தெரியாது. உனக்கு தெரியாது என்றாலும் முயற்சி செய். மலரே, என் இரக்கம் மேலானது. நம்பிக்கையோடு இரு. என் மலரே, என்னை மகிழ்ச்சிப்படுத்து. உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களிடமிருந்து இன்னும் ஒரு சில தீப்பிளம்புகளை அணைப்பாயாக. அன்பு அவர்களுடைய சுத்திகரிக்கிற நெருப்புகளை அணைக்கிறது. எப்போதும் இதை நினைவில் வைத்திரு. நீ எனக்குக் காட்டும் அன்பின் சாரத்தை அவர்களுடைய நெருப்பை அணைக்கவும் அவர்களை மேல்நோக்கி எழுப்பி அங்கிருந்து அவர்களை அகற்றவும் நான் பயன்படுத்துகிறேன். சிலர் இறுதியாக என்னிடமும் வர முடியும். ஆண்டவராகிய நான் என் வார்த்தையை உனக்குத் தந்திருக்கிறேன். இது உன் ஆன்ம உணவாக இருக்கிறது. உன் வேகத்தைக் குறைத்து நான் சொல்வதைக் கேள். குறிப்பு: தம் வார்த்தைகளைக் கேட்கும் முன் என் கரத்தை ஓட விடக்கூடாது என்ற பொருளில் இயேசு இப்படிச் சொல்கிறார். உன் முழுமையான பலவீனத்திலும் கூட உனக்கு என் எல்லா செய்திகளையும் தர நான் வல்லவராய் இருக்கிறேன். எதையும் செய்ய நீ இயலாதவளாய் இருந்தாலும் ஆண்டவராகிய நான் என் வேலையை செய்து முடிப்பேன். என் குழந்தாய், சிறியவளாகவே இருந்துகொள். எனக்கு பிரமாணிக்கமாக நிலைத்திரு. ஆண்டவராகிய நான் என் முழு இருதயத்தோடும் உன்னை அன்பு செய்கிறேன். என்னை மகிமைப்படுத்து. என்னை கனப்படுத்து. என்னைப் பெற்றுக்கொள். ஏனெனில் அது என்னை மகிழ்விக்கிறது. உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி. எப்போதும் உன் இதயத்தைக் கொண்டு ஜெபி. வா. நாங்கள் நாம். ஆம், என் ஆண்டவரே, என் தாயாரே.